பொதுவாக சாதாரண ஹோட்டலில் இருந்து எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியவை தான் தோசை. அதன் வெரைட்டியை பொறுத்து 30 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரை விற்கப்படும். ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் இருக்கும் ஹோட்டலில் தோசை ஒன்று ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள ஒரு தோசை கடை மிகவும் பிரபலம். இந்த கடையில் விற்கப்படும் வெரைட்டியான தோசைகளை சாப்பிட கூட்டம் அலைமோதுகிறதாம்.

இங்குதான் தோசை ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஹோட்டல் உரிமையாளர் இது குறித்து தெரிவிக்கும் போது இந்த ஹோட்டல் தவாவில் தோசை ஊற்றிய பிறகு தங்க முலாம் பூசுவது போல அந்த தோசை உருவாக்கப்படும். தோசையை சாப்பிடுபவர்கள் ஆயிரம் ரூபாய் விலைக்கு இந்த தோசை தகுதியானது தான் எனது சாப்பிடுவார்கள் என்றும் இந்த தோசை ஆர்டரின் பெயரில் உருவாக்கப்படும் என்றும் ஒரு நாளில் ஆறிலிருந்து எட்டு தோசை விற்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் டபுள் டக்கர் பீட்சா தோசை, ரெட் சில்லீஸ் தோசை, டிரை ஃப்ரூட் தோசை, பீட்சா தோசை ஆகியவை இந்த ஹோட்டலின் ஸ்பெஷல் என அவர் தெரிவித்தார்.