இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு பதிவு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பதிவு, வியாபாரம் செய்பவர்களின் கைரேகையும், மற்றவர்களிடம் வேலை செய்பவர்களின் கைரேகையும் எப்படி இருக்கும் என விளக்குகிறது. இதைப் பார்க்கும் அனைவரும் ஒரு நொடி தங்கள் கையைப் பார்த்து, கைரேகைகளை ஆராய்கின்றனர். இந்த வேடிக்கையான பதிவு மக்களை சிந்திக்கவைப்பதோடு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் பதிவு சிலருக்கு சரியாகப் பொருந்தலாம், ஆனால் சிலருக்கு பொருந்தாமல் போகலாம். ஒருவேளை   கைரேகை சரியில்லை என்றால், கட்டைவிரலை லேசாக அசைத்து அட்ஜஸ்ட் செய்தால் போதும், எல்லாம் சரியாகிவிடும். இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.