8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ்  டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று  வரும் நிலையில் இந்த தொடரில் இதுவரை நடந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆடவருக்கான ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி 743 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்தப் பட்டியலில் இந்திய அணியின் சுப்மன் கில் 817 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் 770 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் ரோகித் சர்மா 757 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் ஹென்றிச் கிளாசென் 749 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து இந்தியாவின் விராட் கோலி 743 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்