
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியரில் ஒரு மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருந்த மாணவியை அந்த கல்லூரியில் வேலை பார்க்கும் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கல்லூரியில் மூத்த மருத்துவராக சஞ்சய் குமார் என்பவர் இருக்கிறார். இந்நிலையில் அந்த கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் ஒரு 25 வயது மாணவி தேர்வு சம்பந்தமாக சஞ்சய் குமாரை சந்தித்தார்.
அப்போது ஏதோ வேலை இருக்கிறது எனக்கூறி மாணவியை டாக்டர் தனியாக அழைத்து சென்றுள்ளார். பின்னர் கதவை அடைத்து விட்டு அந்த மாணவியை எவ்வாறு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள டாக்டரை தற்போது வலைவீசி தேடி வருகிறார்கள்.