
ஹைதராபாத் துண்டிக்கல் பகுதியை சேர்ந்த ராவுலா கமல் குமார் என்பவர் தனது சார்ஜர் காணாமல் போனதாக கூறி சாந்தி என்பவரை சந்தேகப்பட்டு அவரிடம் தகராறு செய்துள்ளார். ஆகஸ்ட் 21 அன்று தனது கடைக்கு அருகில் கடை வைத்திருக்கும் சாந்தியிடம் சென்று தனது சார்ஜரை திருடியதாக சண்டையிட்டுள்ளார்.
பின்னர் ஆகஸ்ட் 24 அன்று மீண்டும் சாந்தியின் கடைக்கு சென்று சார்ஜரை கேட்டு சண்டையிட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் சாந்தியை கமல் குமார் கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளார்.
சாந்தி இறந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த கமல் அங்கிருந்து தப்பி தலைமறைவாக முயற்சித்தார். ஆனால் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து காவல்துறையினர் கமல் குமாரை கைது செய்தனர்.