திமுக ஆட்சியில் ஒரு குடும்பத்துக்கு மாதம் ₹5,000 கிடைக்கும் வகையில் நலத்திட்டங்கள் செயல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் ₹1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதனால் பல லட்சம் பெண்கள் பயனடைகிறார்கள். அதுமட்டுமின்றி பெண்களுக்கு இலவச பேருந்து மூலம் மாதம் ₹2,000 மிச்சமாகிறது என்றும், முதியோர் உதவித்தொகை மூலமாக ₹1,200, புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி படிக்கும் பெண்களுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.