தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு கட்சிகள் அரசியல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.

மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற த.வெ.க. 2வது மாநில மாநாட்டில் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்ற முழக்கத்துடன் விஜய் பாஜகவை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “யாருடைய சுற்றுப் பயணமும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதுவும் செய்ய முடியாது. ஒரு கவுன்சிலராகவோ, ஒரு எம்எல்ஏவாகவோ கூட ஆகாத நிலையில், ‘அவரை தோற்கடிப்பேன், இவர் எனக்கு எதிரி’ என்று கூறுவது பக்குவமில்லாத வார்த்தை” எனக் குறிப்பிட்டார்.