உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரதபூர் என்ற கிராமத்தில் ராம் சேவாக் (64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாக்ஷி என்ற மருமகள் இருக்கிறார். இதில் மாமனார் மற்றும் மருமகள் இடையே அடிக்கடி சொத்து தொடர்பாக தகராறு எழுந்துள்ளது. இதன் காரணமாக சாக்ஷிக்கு தன் மாமனார் சொத்துக்களை எல்லாம் அவருடைய மகளுக்கு கொடுத்து விடுவார் என்ற அச்சம் வந்தது. இதனால் மாமனாரை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

அதன்படி கடந்த புதன்கிழமை இரவு மாமனார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சாக்ஷி தன்னுடைய உறவினர்களான சத்ருகன் மிஷ்ரா மற்றும் சுபவ் மிஸ்ரா ஆகியோருடன் அங்கு சென்றார். இவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு இரும்பு கம்பியால் அவரை அடித்தே கொலை செய்தனர். அதன் பின்  மறுநாள் அவர் வீட்டில் பிணமாக கிடந்தது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் அவர்கள் நடத்திய  விசாரணையில் மேற்கண்ட விவரங்கள் தெரிய வரவே சாக்ஷி உட்பட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.