
பிரபல நடிகையான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் நயன்தாராவின் திருமண ஆவணப்படம் ரிலீஸ் ஆகவில்லை. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திருமண வீடியோ ரிலீசாகும் என்ன நெட்பிளிக்ஸ் அறிவித்தது. டிரெயிலர் வீடியோவில் பயன்படுத்தப்பட்ட மூன்று வினாடி பாடலுக்காக 10 கோடி ரூபாய் கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷ் பற்றி பேசி நயன்தாரா தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நெட்பிளிக்சில் வெளியாகவுள்ள ஆவணப்படத்தில் என் வாழ்க்கையில் முக்கிய படமான நானும் ரவுடிதானே சேர்க்க முடியாமல் போனது மற்றும் அந்த படத்தின் புகைப்படங்கள், பாடல்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஒப்புதல் கேட்டு இரண்டு வருடங்களாக உங்கள் பின் அலைந்தோம். ஆனாலும் இறுதிவரை அது நடக்கவில்லை. அந்த படத்தின் பாடல் வரிகளை பயன்படுத்தக் கூடாது என நீங்கள் மறுத்தது என் மனதை நொறுக்கியது என நயன்தாரா தனுஷின் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் உங்களுடன் பயணித்தவர்கள் வெற்றி பெற்றால் இந்த குழுவும் இல்லாமல் அமைதியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்த கடிதத்தின் மூலம் வேண்டுகிறேன். உலகம் எல்லோருக்கும் சமமாக இருக்கிறது. கடின உழைப்பின் கடவுளின் அருள் மக்களின் பேரன்பு காரணமாக வெற்றி பெரும் ஒருவர் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் அது உங்களை பாதிக்க கூடாது. அடுத்த இசை வெளியீட்டு விழாவில் இது போன்ற விவகாரங்கள் நிகழவில்லை என பிரார்த்திக்கிறேன்.