
ஏராளமான மக்கள் 3-4 சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கின்றனர். இதனிடையே மக்கள் வங்கி கணக்கை திறக்க எந்தவொரு வரம்புமில்லை. ஆகவே ஒரு நபர் எத்தனை கணக்குகளை வேண்டும் என்றாலும் திறக்கலாம். அதே நேரம் அதனை நிர்வாகிப்பதும் எளிது. உங்களது கணக்குகளிலிருந்து உரிய பரிவர்த்தனைகளை தொடர்ந்தால் எந்த பாதிப்புமே இருக்காது. நீண்டகாலமாக உங்களது வங்கி கணக்கை நீங்கள் பயன்படுத்தாமல் இருப்பின், வங்கி உங்களது கணக்கை மூடலாம்.
ஆகவே உங்கள் அனைத்து கணக்கையும் தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமென பரிந்துரைக்கப்படுகிறது. எனினும் பல்வேறு வங்கி கணக்குகளைத் திறக்கும்போது ஒருசில விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும். அனைத்து வங்கிகளும் சம்பள கணக்கைத் தவிர்த்து சேமிப்புக்கணக்கில் குறைந்தபட்ச இருப்பை வைத்திருப்பதை கட்டாயமாக்கி இருக்கிறது. அதன்படி, உங்களது வங்கிக்கணக்கில் நீங்கள் எப்போதும் குறைந்தபட்ச இருப்பை வைத்திருக்கவும். இதனை செய்யவில்லையெனில் வங்கி கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகையானது கழிக்கப்படும்.