ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் நடைபெறவுள்ளது. காங்கிரஸ், அதிமுக, நாதக, தேமுதிக என 4 முனைப்போட்டி நிலவுகிறது. கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு  வருகின்றனர். பொதுவாக சொல்லப்போனால் இடைத் தேர்தல் வந்தாலே அந்த தொகுதி மக்கள் கொண்டாட்டமாகி விடுவார்கள்.

ஏனெனில் ஆளுங்கட்சியினரும் எதிர் கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை வாரி இறைப்பார்கள் என்று ஒரு கூற்று உண்டு. அந்த பார்முலா ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலிலும் கடைபிடிக்கப்படுகிறது. ஒருபுறம் கைகளில் குக்கர்களுடன் மக்கள் நடந்து போகிறார்கள். மறுபுறம் காலில் வெள்ளிக் கொலுசு மின்னுகிறது.