
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் சேவாக் 2011 ஆம் வருடம் உலக கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தவர். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முறை மூன்று சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இந்திய அணிக்கு பெரும் பங்களிப்பை கொடுத்த சேவாக் 2015 ஆம் வருடத்தோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடுபட்டார்.
இருப்பினும் போட்டியின் ஆரம்பத்திலிருந்து அக்கறையோடு விளையாடும் இவருடைய பேட்டிங் ஸ்டைல் இன்றளவும் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேவாக் ஒருநாள் கிரிக்கெட் விளையாட்டிற்கான சிறந்த ஐந்து பேட்ஸ்மேன்களை தேர்வு செய்து இருக்கிறார். அதில் சிறந்த இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி முதல் வீரராகவும், இரண்டாவது வீரராக ஜாம்பவான் சச்சினையும் தேர்வு செய்துள்ளார். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பேட்ஸ்மேன்கள் தற்சமயம் விளையாடும் வீரர் மட்டுமே மற்று நான்கு பேரும் ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி விராட் கோலி (இந்தியா). 2. சச்சின் (இந்தியா). 3. இன்சமாம் – உல் – ஹக் (பாகிஸ்தான்). 4. ஏபி டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா). 5. கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் அடங்குவர்.