1987 ஆம் வருடம் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்பஜன் என்பவரது நிலத்தை ஒன்றிய அரசு கையகப்படுத்தி உள்ளது. இந்த நிலத்திற்கு ஹர்பஜன் அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதாக இல்லை என்று கூறி அவர் குர்தாஸ்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹர்பஜன் அவர்களுக்கு கூடுதல் இழப்பீடும் தாமதமான காலத்திற்கான வட்டியையும் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஒன்றிய அரசு பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

வழக்கை விசாரித்துவிட்டு குர்தாஸ்பூர் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பஞ்சாப் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து ஒன்றிய அரசின் வழக்கறிஞர் தொடர்ந்து வாதாடியுள்ளார். இதனால் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக ஒன்றிய அரசுக்கு 25 ஆயிரம் அபராதம் விதித்து பஞ்சாப் நீதிமன்றம் உத்தரவிட்டது.