இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்களை தனிப்பட்ட வகையில் நிர்ணயம் செய்கிறது. அதில் மூத்த குடிமக்களுக்கு அனைவரை விட அதிகமான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி தன்னுடைய பிக்சட் டெபாசிட் திட்ட வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி 180 முதல் 270 நாட்கள் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதம் 6% அதிகரிக்கப்பட்டுள்ளது. 271 முதல் ஒரு வருடம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் 6.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது. அதனைப் போலவே நான் ஒரு நாட்கள் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 7.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது. இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்களின் மூலம் வாடிக்கையாளர்கள் கூடுதல் பலனை பெறலாம்.