இப்போது ஒன்பிளஸ் பிராண்ட் அதன் விற்பனையை நேரலை செய்து உள்ளது. இந்நேரத்தில் ஸ்மார்ட்போன்களில் தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். இந்த விற்பனை உங்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும். நிறுவனத்தின் இச்சலுகைக் கால விற்பனையில் உங்களுக்கு ஒன்பிளஸ் 10 ப்ரோ, ஒன்பிளஸ் 10ஆர் மற்றும் நார்ட் சீரிஸ் ஸ்மார்ட் போன்களை மலிவு விலையில் வாங்கி பயன்பெற்றுக் கொள்ளலாம்.

இது தவிர்த்து ஸ்மார்ட் டிவிகள், எலெக்ட்ரானிக்ஸ் பாகங்கள் என பல்வேறு பொருட்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் விற்பனையில் நீங்கள் ரூ.12,000 வரையிலும் சேமிக்க முடியும். இச்சலுகை பிராண்டின் முதன்மை சாதனங்களில் கிடைக்கும். அதோடு வங்கி சலுகைகளையும் பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமாக மொபைலை வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ள இயலும். ICICI வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மொபைலை வாங்குபவர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுவதோடு கூடுதலாக எக்ஸ்சேஞ் சலுகைகளும் வழங்கப்படுகிறது.