Redmi Note 12 5G போனில் 6.67 அங்குலம் FHD+AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது. போனின் காட்சியின் ரெசஸ் யூஷன்1080 x2400 பிக்சல்கள் மற்றும் இது 120Hz புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கிறது. காட்சியின் உச்சப்பிரகாசம் 1200 நிட்ஸ் வரை இருக்கிறது. Redmi Note 12 5G எனும் பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 4 Gen 1 செயலியில் வேலை செய்கிறது. 6gp ரேம் மற்றும் 128gp வரை சேமிப்பகத்திற்கான ஆதரவை இந்த போன் கொண்டு உள்ளது.

மைக்ரோ எஸ்டி கார்டு வாயிலாக போனின் சேமிப்பகத்தை அதிகரிக்கலாம். Redmi Note 12 5G ஆனது 5000 mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டு உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI-ல் வேலை செய்கிறது. பாதுகாப்புக்காக கைரேகை சென்சார் இதில் கிடைக்கும். இதன் பின்புறம் டிரிபிள் கேமரா அமைப்பானது கிடைக்கும். அதேபோல் தொலைபேசி 48MP முதன்மை, 8MP அல்ட்ரா வைட் மற்றும் 2MP மேக்ரோ கேமரா பெறும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 16mp கேமரா இருக்கிறது.

Redmi Note 125G 3 சேமிப்பு வகைகளில் வருகிறது – 4GB RAM +64GB, 6GB RAM+128GB மற்றும் 8GB RAM +256G. இதன் அடிப்படை மாடலின் விலையானது ரூ.16,999 ஆகும். அதே சமயத்தில் அதன் மற்ற 2 வகைகளும் முறையே ரூ.18,999 மற்றும் ரூ.20,999 ஆகும். இந்த போனை வாங்கும்போது தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகளில் ரூ.1,500 வரை உடனடி தள்ளுபடியானது கிடைக்கும். அதோடு ரூ.812 முதல் EMI வசதியை பெறலாம்.