ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் வருடம் முழுவதும், சிவப்பு எறும்புகள் ஏராளமாகக் காணப்படும். இந்த எறும்புகள் மரங்களின் இலைகளில் கூடு கட்டி வாழும். இந்த எறும்புகளை பிடித்து அப்பகுதி மக்கள் சட்னி செய்து சாப்பிடுவார்கள். இது அந்த மக்களுக்கு மிகவும் பிடித்த உணவாகும். அதில் அதிக அளவு புரதம், கால்சியம், ஜிங்க், வைட்டமின் பி-12, இரும்புச் சத்து, மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், காப்பர் மட்டும் 18 வகையான அமினோ அமிலங்கள் உள்ளன.

இந்த எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கக்கோரி கோரிக்கை வைக்கப்பட்டது. மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்த எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.