இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயனடைவதற்காக பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த நிலையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பெண் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 12 ஆயிரம் ரூபாய் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தொகை 4000 ரூபாய் என ஆண்டுக்கு மூன்று தவணையாக வங்கி கணக்கில் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த நிதி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு விடுவிக்கப்படும் என்று கூறப்படுகின்றது. இதுவரை ஆண் மற்றும் பெண் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.