இந்தியாவில் ஒவ்வொரு ஊழியருக்கும் வருங்கால நிதி அமைச்சகத்தில் கணக்கு தொடங்கப்படும் நிலையில் இதன் மூலம் ஊழியர்கள் பணி ஓய்வுக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட தொகையை பெற முடியும். ஓய்வு காலத்திற்குப் பிறகு பலரும் பிஎப் கணக்கில் இருக்கும் தொகையை எடுக்க முயற்சிக்கின்றனர். இப்படியான நேரத்தில் கணக்கு முடக்கப்பட்டு இருக்கும். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் 36 மாதங்களுக்கு எந்த ஒரு பண பரிவர்த்தனையும் மேற்கொள்ளாமல் இருப்பது தான்.

இப்படி இருந்தால் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் உங்களுடைய கணக்கு தானாக முடக்கப்பட்ட விடும். இந்த நிலையில் கணக்கு தாளர்கள் KYC மூலம் கணக்கை புதுப்பித்து உங்களுடைய தொகையை வட்டியுடன் பெற்றுக் கொள்ளலாம் . இதில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை எடுப்பதற்கு வைப்பு நிதி ஆணையரின் ஒப்புதல் அவசியமாகும். இதுவே 25 ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்ட தொகையை பெறுவதற்கு கணக்கு அதிகாரி ஒப்புதல் வழங்க வேண்டும்