ஒடிசா மாநிலத்தில் சமீப காலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒருவரின் செல்போனை மர்ம நபர்கள் சிலர் திருடி சென்ற நிலையில் அது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே திருடப்பட்ட செல்போனை சில நபர்கள் விற்க முயல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு செல்போனை விற்க முயன்ற 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் அந்த நபர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும் விசாரணை நடத்தியதில் 10-க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் அவர்களிடமிருந்து 25 செல்போன் மற்றும் 4 லேப்டாப்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  மேலும் அவர்களை காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.