ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இன்று வெளியான ஃபர்ஹானா படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. தமுமுக-வின் போராட்டத்தை தொடர்ந்து திருவாரூரில் இன்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பட காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவாரூரில் ஒரு திரையரங்கில் தான் இந்த படம் இன்று வெளியானது. அந்த காட்சியும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது தமிழகத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஃபர்ஹானா திரைப்படத்திற்கும் கடும் எதிர்ப்புகள் வருகின்றன.