இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 18வது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் மோதியது. இதில் ராஜஸ்தான் அணியிடம் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் எம்.எஸ் தோனி 10 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்தார்.

 

கடைசி சூழலில் 20 ரன்கள் தேவைப்பட்டபோது தோனி மற்றும் ஜடேஜா நடுவில் இருந்தனர். ஆனால் தோனி அவுட் ஆகி வெளியேறியதால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். குறிப்பாக தோனி அவுட் ஆனபோது சமூக வலைதளத்தில் ஒரு ரசிகை கொடுத்த ரியாக்ஷன் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் அவரின் ரியாக்சன் தோனி அவுட் ஆனதை  விட மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து சொல்லி வருகிறார்கள்.