விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் லியா லட்சுமி என்ற நான்கு வயது சிறுமி எல்கேஜி படித்து வந்தார். இந்த நிலையில் லட்சுமி விளையாடிக் கொண்டிருந்தபோது முழுவதுமாக சேதம் அடைந்து காணப்பட்ட செப்டிக் டேங்க் மூடி மீது ஏறி நின்றார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு மூடி உடைந்து லட்சுமி தொட்டிக்குள் விழுந்தார்.

இதனை பார்த்து மற்ற குழந்தைகள் சத்தம் போட்டனர். உடனே ஆசிரியர்கள் ஓடி வந்து லட்சுமியை மீட்க முயன்றனர். அதற்குள் விஷவாயுத்தாக்கி லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.