சமூக ஊடகங்களில் குடும்பங்களின் அன்பும் நையாண்டியும் கலந்து உருவாகும் வீடியோக்கள் பெரிதும் பிரபலம் அடைவது இயல்பான ஒன்றாகிவிட்டது. இந்நிலையில், ஒரு தந்தையின் பீட்சா சாப்பிடும் வீடியோ , தற்போது நெட்டிசன்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது.
@ritzz__2409 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், இரண்டு இளம்பெண்கள் தங்கள் தந்தைக்காக அன்புடன் வீட்டில் பீட்சா தயாரிக்கின்றனர். மனைவி பீட்சாவை அவருக்குக் கொண்டு வரும்போது, எதிர்பாராத முறையில் தந்தை “இந்த லாஸ்ராவை அகற்று… நான் லாஸ்ரா சாப்பிட மாட்டேன்” என்று கூறுகிறார். இங்கு, ‘லாஸ்ரா’ என அவர் அழைப்பது பீட்சா மேலிருக்கும் உருகிய சீஸ் ஆகும்.
தந்தை சொன்னதை கேட்ட மகள்கள் சிரிப்புடன், “அப்பா, இது லாஸ்ரா இல்லை… இது பீட்சாவில் போடப்படும் சீஸ்!” என்று விளக்குகின்றனர். ஆனால், தந்தை தன் கருத்தில் உறுதியுடன்,
“சரி, எனக்கு லாஸ்ரா வேண்டாம். சீஸ் கொடு, நான் சாப்பிடுகிறேன்” என்று பதிலளிக்கிறார்.
View this post on Instagram
வீடியோவில் நகைச்சுவைத் தருணம் அதாவது ‘கிளைமாக்ஸ்’ பகுதி, மனைவி பீட்சாவில் இருந்து ஒரு துண்டு சீஸைப் பிரித்து அவருக்குக் கொடுக்கும் தருணம். அதை சாப்பிட்ட தந்தை, “எனக்கு ரொட்டியைக் கொடுக்காதே!” என கூறுகிறார். அதாவது, பீட்சா செய்யப்பட்ட அடிப்பகுதி வேண்டாம் எனத் தெரிவிக்கிறார்.
இந்த வீடியோ தற்போது மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது. தந்தையின்செயல்கள் ம் சமூக ஊடக பயனர்களிடையே பரவலான வசீகரத்தையும் நகைச்சுவையையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும், “எனது அப்பா கூட இப்படித்தான், சீஸ்-ஐ மட்டும் தனியாக சாப்பிட தயார், பீட்சா என்றாலே வெறுப்பு!” என்றும், “இந்த வீடியோ ஒரு தந்தை மகள்களின் அன்பையும், பாசமும், நகைச்சுவையையும் நன்கு காட்டுகிறது” என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
