
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியூர் கிராமத்தில் ஏழுமலை-கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் சந்தோஷ் தனது தாய் கீதாவுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்த நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்தபோது மணல் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரது தாய் கீதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தோஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.