அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்ள இருக்கிறது. இந்த போட்டியை முன்னிட்டு இந்த மாதம் மெகா ஏலம் நடைபெற இருக்கும் நிலையில் முன்னதாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்த நிலையில் ஒவ்வொரு அணியும் தங்கள் தக்க வைத்துள்ள வீரர்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டது.

இந்தியாவில் தற்போது ஐபிஎல் மெகா ஏலம் எங்கு எப்போது நடைபெறும் என்பதை பிசிசிஐ முடிவு செய்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு டிசம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஏலம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.