இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா இடையிலான விவாகரத்து வழக்கில், பம்பாய் உயர் நீதிமன்றம் (Bombay High Court) ஒரு முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது. வழக்கறிஞர்களின் தகவலின்படி, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதால், சட்டப்படி வழங்கப்படும் 6 மாதம் சேர்ந்து வாழ்வதற்கான காலத்தை நீக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், மும்பை  குடும்ப நீதிமன்றம் மார்ச் 20க்குள் விவாகரத்து மனுவை தீர்மானிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது சஹால் IPL 2025 சீசனில் பங்கேற்க இருப்பதால் முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தனஸ்ரீ மற்றும் சாஹல்இருவரும் கடந்த  2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர், ஆனால், சில ஆண்டுகளாகவே இருவரும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே பாண்ட்ரா குடும்ப நீதிமன்றம், விவாகரத்துக்கு முன் 6 மாத காத்திருப்பு காலத்தை நீக்க மறுத்தது, காரணமாக சாஹல் தனது மனைவிக்கு வழங்க வேண்டிய நிரந்தர வாழ்க்கைத் தொகையிலிருந்து முழுமையான தொகையை செலுத்தவில்லை என்பதே இருந்தது. விவாகரத்து ஒப்பாந்த்ப்படி சாஹல்  தனது மனைவிக்கு ₹4.75 கோடி செலுத்த ஒப்புக்கொண்டிருந்தார், ஆனால் இதுவரை ₹2.37 கோடி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, முழுமையான தொகை வழங்கப்படாததால், அப்போது 6 மாத காலம் நீக்கப்படவில்லை. ஆனால், பம்பாய் உயர் நீதிமன்றம், இருவரும் 2.5 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்துவிட்டதன் காரணமாக, முழுமையான தொகை வழங்கும் விடயம் நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மார்ச் 20க்குள் தீர்ப்பு வழங்குமாறு குடும்ப நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனால் IPL தொடங்குவதற்குள் விவகாரத்து வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.