
பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய நிலையில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு வீரர் விராட் கோலி 47 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் சின்னச்சாமி மைதானத்தில் இதுவரை விராட் கோலி 87 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 3005 ரன்கள் குவித்துள்ளார்.
இதன் மூலம் ஒரே மைதானத்தில் விளையாடி அதிக ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இதேபோன்று விராட் கோலி நேற்று நடைபெற்ற போட்டியில் 33 ரன்களை எடுத்த நிலையில் டி20 போட்டியில் இந்திய மண்ணில் 9000 ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவர் இந்தியாவில் 268 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் மொத்தம் 9014 ரன்கள் குவித்துள்ளார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் 37 சிக்சர்கள் அடித்து அதிக சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார்.