
ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்நிலையில் நடப்பாண்டுக்கான டி20 தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் 844 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் 838 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 797 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்திலும் இருக்கிறார்கள். அதன்பிறகு இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 7-ம் இடத்திலும், ருதுராஜ் கெய்க்வாட் 20-வது இடத்திலும் இருக்கிறார்கள். அதன்பிறகு பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் அடில் ரஷித் 718 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ள நிலையில் தென்னாபிரிக்க வீரர் நோர்ட்ஜே 675 புள்ளிகள் பெற்று 7-ம் இடத்தில் இருந்து 2-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதன் பிறகு இலங்கை வீரர் ஹசரங்கா 674 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்திலும், ஆப்கானிஸ்தான் வீரர் ரக்ஷித் கான் 668 புள்ளிகள் பெற்று 4-ம் இடத்திலும் இருக்கிறார்கள். இதில் இந்திய வீரர் அக்சர் படேல் 657 புள்ளிகள் பெற்று ஏழாம் இடத்திலும், குல்தீப் யாதவ் 654 புள்ளிகள் பெற்று எட்டாம் இடத்திலும், பும்ரா 640 புள்ளிகள் பெற்று 12-வது இடத்திலும், அர்ஷ்தீப் சிங் 635 புள்ளிகள் பெற்று 13-வது இடத்திலும் இருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவும், இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவும் 222 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளனர். இதில் ஹர்திக் பாண்டியா 2 இடங்கள் உயர்ந்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலிய வீரர் மார்க்கஸ் ஸ்டோயினிஸ் 211 புள்ளிகள் பெற்று 3-ம் இடத்திலும், இந்திய வீரர் அக்சர் படேல் 164 புள்ளிகள் பெற்று 12-வது இடத்திலும் இருக்கிறார்கள்.