
தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிகர் விஜய் தன்னுடைய கடின உழைப்பின் மூலம் தற்போது எட்டாத உயரத்தை அடைந்துள்ள நிலையில் ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். ஆனால் தற்போது தளபதி 69 படத்தோடு சினிமாவிலிருந்து விலகும் விஜய் அதன் பிறகு முழு நேர அரசியலில் கவனம் செலுத்த உள்ளார்.
நடிகர் விஜயின் முதல் மாநாடு கடந்த மாதம் நடைபெற்ற போது கேரியரின் உச்சத்தில் இருக்கும் நான் அனைத்தையும் உதவி தள்ளிவிட்டு தமிழக மக்களுக்கு நல்லது செய்வதற்காக அரசியலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தற்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார் எனவும் அவருக்கு அரசியல் பற்றிய அனுபவம் இல்லை எனவும் அவர் களத்தில் நின்று மக்களுக்காக உதவிகளை செய்ய வேண்டும் எனவும் பலர் கூறி வருகிறார்கள்.
ஆனால் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே பலருக்கும் ஏராளமான உதவிகளை செய்துள்ளார். குறிப்பாக ஏழை மாணவர்களை படிக்க வைத்தது முதல் தமிழகத்தில் வெள்ளம் போன்ற காலகட்டத்தில் நிவாரண உதவிகளை வழங்கியது வரை ஏராளமான விஷயங்கள் உள்ளது.
நீட் தேர்வினால் மாணவி அனிதா உயிரிழந்த போது நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய் அவர்கள் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கினார். இதேபோன்று துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த உதவிகளை செய்தார். கேரளாவில் வெள்ளம் வந்தபோது கூட நடிகர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார்.
மேலும் தமிழக மக்களுக்காக நடிகர் விஜய் இப்படி ஏராளமான உதவிகளை செய்துள்ள நிலையில் அவர் செய்த உதவிகள் குறித்த செய்திகள் நாளிதழ்களில் வந்த நிலையில் அதனை ஒரு வீடியோவாக விஜய் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள். மேலும் நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு வந்தாலும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே மக்களுக்காக உதவிகளை செய்துதான் வருகிறார் அவர் மக்களுக்கான தலைவன் என்ற விதத்தில் விஜய் ரசிகர்கள் அந்த வீடியோவை வைரல் ஆக்குகின்றனர்.
இனிய காலை வணக்கம் தோழர்களே 💐❤️❤️ pic.twitter.com/IeG8XT2Xip
— Sangeetha -TVK✨ (@sangeet29332013) November 28, 2024