கிராமங்களில் உள்ள ஓலை குடிசை, ஓடு, ஆஸ்பெட்டாஸ் சீட் வீடுகளுக்கும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் பல மடங்கு சொத்து வரியை உயர்த்தியுள்ள அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிராமங்களில் வீட்டு வரி, தண்ணீர் வரிகளை உயர்த்தி இருப்பதை கண்டிக்கிறேன். கிராம பகுதிகளில் உயர்த்தப்பட்ட வீட்டு வரிகளை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ரிசர்வ் வங்கி நகை கடன் மீதான புதிய நிபந்தனைகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்திய மக்கள் தொகையில் 80 சதவீத மக்களுக்கு மேல் ஏழை, எளிய நடுத்தர மக்கள் உள்ளனர்.

ஒரு அவசர தேவைக்காக கூட்டுறவு வங்கிகள் வணிக வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்து நிலைமையை சமாளிக்கும் சராசரி மக்களுக்கு இந்த புதிய விதிமுறைகள் அதிர்ச்சி அளித்துள்ளது. எனவே ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.