
சீக்கிய மதத்தின் புனித நூலான ‘குரு கிரந்த் சாஹிப்’ நூல்களின் நகல்கள் (Saroops) சமீபத்தில் டெல்லியில் இருந்து ஹாங்காங்குக்கு விமானம் மூலம் மிக உயர்ந்த மதிப்புமிக்க மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டன. Air India விமானத்தின் முழு பிஸினஸ் கிளாஸ் இந்த புனிதப் பணிக்காக ஒதுக்கப்பட்டது. விமானி சாரப் ஜஸ்பிரீத் மின்ஹாஸ் இந்த நிகழ்வில் பங்கேற்றதை பெருமையுடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். “இந்த புனிதப் பணியில் பங்கேற்றதற்கான ஆசீர்வாதம் தனக்கு கிடைத்துள்ளது,” என அவர் பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram
விமானதில் ஏறும் முன், ஒவ்வொரு Saroop-ஐயும் தலைமேல் தூக்கிச் சென்று மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோன்று ஹாங்காங்கில் விமான நிலையம் வந்ததும் அதே மரியாதையைப் பின்பற்றி aerobridge வழியாக உள்ளே கொண்டு செல்லப்பட்டது. குடியுரிமை சோதனை வரை அந்த மரியாதை முறைகள் தொடர்ந்தன. இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி, “இது மிக நெகிழவைக்கும் காட்சி”, “நமது புனித நூலுக்கு கொடுக்கப்படும் மரியாதை பாராட்டத்தக்கது” என நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். மேலும் Air India குழுவும், ஹாங்காங்கில் உள்ள குருத்வாரா சமூகத்தினரும் இந்த புனித பணியை மிக நுட்பமாகவும் மரியாதையுடனும் செய்து பெருமை சேர்த்துள்ளது.