தற்போது கோடை விடுமுறை தொடங்கிருப்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பக்தர்களுடைய நலனுக்காக கோடை விடுமுறை முழுவதும் விஐபி தரிசனம் ரத்து செய்ய தேவஸ்தான முடிவு எடுத்துள்ளது. இந்த நாளில் திருப்பதி திருமலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் குட் நியூஸ் ஒன்றை சொல்லியுள்ளது.

அதாவது திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் விதவிதமான வஸ்திரங்களை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள் . மேலும் அதோடு இணைந்த கோயிலுக்கும் பக்தர்கள் ஆடைகளை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். அந்த ஆடைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏலம் விட முடிவு செய்துள்ளது . இந்த மாதமே ஏலம் விட தயாராகி இருக்கிறது. பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய ஆடைகள் ஏப்ரல் 15 முதல் 23ம் தேதி வரை ஏலம் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு திருப்பதியில் உள்ள TTD சந்தைப்படுத்தல் அலுவலகத்தை 0877-2264429 என்ற எண்ணிலோ அல்லது TTD இணையதளமான www.tirumala.org / www.konugolu.ap.govt.in என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.