தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. தமிழ் சினிமாவின் டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் சமீபத்தில் ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஹாட்டான வெப்சீரிஸ்களில் படு கிளாமராக நடித்துள்ளார்.

இந்நிலையில்  மும்பையில் உள்ள தனது 3 அப்பார்ட்மெண்ட்களில் ஒன்றை சுமார் ரூ. 7 கோடிக்கு அவர் அடகு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமல்ல, வணிக வளாகம் ஒன்றை 5 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்து, ரூ. 72 லட்சம் முன்பணம் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது