தமிழ் சினிமாவில் களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஓவியா. இந்த படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்து  ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஓவியாவுக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது  நடிகை ஓவியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா நடித்த 90 எம்எல் திரைப்படம் பல்வேறு விதமான ட்ரோல்களை சந்தித்தது.

இந்த படத்திற்கு பிறகு நடிகை ஓவியா அதிக அளவில் படங்களில் நடிக்காத நிலையில் சமூக வலைதளம் மூலம் அடிக்கடி தன்னுடைய ரசிகர்களுடன் உரையாடுவார். அந்த வகையில் ரசிகர் ஒருவர் நடிகை ஓவியாவிடம் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டுள்ளார். அதற்கு நடிகை ஓவியா எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. ஏன் இந்த கேள்வியை கேட்டு உயிரை எடுக்கிறீர்கள் என்று கோபமாக கூறியுள்ளார்.