தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் த்ரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படம் அக்டோபர் 19-ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் தற்போது படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி லியோ திரைப்படம் 400 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாம். அதன்படி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் லியோ படத்திற்கான ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமையை netflix நிறுவனம் 120 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாம். அதன் பிறகு சாட்டிலைட் உரிமையை சன் டிவி 70 கோடி ரூபாய்க்கும், சோனி மியூசிக் நிறுவனம் பாடல்களுக்கான உரிமையை 18 கோடி ரூபாய்க்கும், ஹிந்தி டப்பிங் சாட்டிலைட் உரிமை 30 கோடி ரூபாய்க்கும் வியாபாரம் ஆகியுள்ளதாம்.

அதன் பிறகு உலகம் முழுவதும் உள்ள திரையரங்க உரிமை மட்டுமே 175 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளதாம். இதில் ஓவர் சீசில் 50 கோடி ரூபாய்க்கும், தமிழ்நாட்டில் 75 கோடி ரூபாய்க்கும், கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் 35 கோடி ரூபாய்க்கும், மீதமுள்ள மாநிலங்களில் 15 கோடி ரூபாய்க்கும் திரையரங்கு உரிமையை கேட்டிருக்கிறார்களாம். இதன் மூலம் தற்போது  படம் 400 கோடி ரூபாய் விற்பனையாகியுள்ள நிலையில் லோகேஷ் கனகராஜின் எல்யூசி-க்குள் லியோ படம் வரும் என அறிவிப்பு வெளியானால் இன்னும் பல கோடிகளுக்கு படம் விற்பனையாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் அதிகரித்துள்ளது.