ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு அரசியல் நிபுணர்களை அழைத்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு பேசுவது அரசியல் கிடையாது என்று அண்ணாமலை பேசியுள்ளார்.

யார் ஒருவரை எத்தனை முறை சந்தித்தாலும் நாங்கள் மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இங்கு வந்தீர்கள் என்றால் ஒரு லட்சம் மக்களை சந்திக்கலாம. மக்களை சந்தித்தீர்கள் என்றால் பிரச்சனைகள் சொல்வார்கள்.  இதுதான் அரசியல். ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு அரசியல் நிபுணர்களை அழைத்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு அவர்கள் சொல்வதை கேட்பது அரசியல் கிடையாது.

மக்கள் இருக்கும்பொழுது எதற்கு தந்திரம் வேண்டும். யாத்திரைக்கு போங்க.. காவடி எடுங்க.. மக்களை சந்திங்க தெருவுல நில்லுங்க.. மக்களைக் கேட்காமல் ஏசி ரூம் போட்டு நாம் ஒரு தந்திரத்தை வைத்து ஜெயித்து விடுவோம் என்று நினைத்தார்கள் என்றால் வருகின்ற காலத்தில் அவர்களுக்கு மக்கள் சொல்வார்கள்.   எங்கேயோ இருக்கக்கூடிய ஒருவர் வந்து அவர் நாலு பேரை பிடித்து அவர்கள் நான்கு பேரிடம் சென்று சர்வே எடுத்து, அவர்களெல்லாம் யாரு மாச சம்பளம் வாங்கக்கூடிய பசங்க. அவங்களுக்கெல்லாம் பசியோட அருமை எப்படி தெரியும்? இல்ல மக்களுடைய பிரச்சினை தெரியுமா? என்று பேசியுள்ளார்.