நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. அதே சமயம் பல புதிய திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாயில் அமிர்த கலசம் என்ற புதிய திட்டம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. எஸ்பிஐ வங்கியின் மிக அதிக வட்டி தரும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டமான அமிர்த கலசம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் 400 நாட்கள் பிக்சர் டெபாசிட் செய்தால் ஆண்டுக்கு 7.10 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.60 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கடைசி நாள் ஏப்ரல் 30ஆம் தேதி உடன் முடிவடைந்த நிலையில் தற்போது ஜூன் 30-ம் தேதி வரை இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது .