இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு ஊழியர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு மே 3-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது.

அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் தங்கள் நிறுவனத்துடன் சேர்ந்து அதற்காக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் 3-ம் தேதி முடிவடையும் நிலையில், இன்னும் இரண்டு நாட்கள் தான் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இருக்கிறது. மேலும் இந்த குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.