நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரையிலான வைப்புகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில் இந்த திட்டத்தின் மூலம் வயதானவர்கள் அவர்களின் கால வைப்புத் தொகைக்கு கூடுதல் வட்டி வழங்குவதன் மூலமாக அவர்களுக்கு எதிர்காலத்தில் பணம் நெருக்கடி இல்லாமல் இருக்க முடியும். இந்த திட்ட மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 எஸ்பிஐ வி கேர் வட்டி விகித அடிப்படை புள்ளிகளின் பொதுவட்டை விகிதத்தை விட கூடுதல் பிரிமியத்திலிருந்து பலன் பெற முடியும். மூத்த குடிமக்களுக்கான மொத்தம் 100 அடிப்படை புள்ளிகள் அதிகமாக வட்டியை பெறலாம். இதில் மூத்த குடிமக்கள் ஜீரோ புள்ளி 50 சதவீதம் அதிக வட்டி விகிதம் பெற முடியும் எனவும் நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் 3.50 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரை ஏழு நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை எஸ்பிஐ வங்கி வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.