
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதே சமயம் பல்வேறு சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் பல மடங்கு அதிகம்.
அதுமட்டுமல்லாமல் வட்டி விகிதமும் sbi வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு அதிகம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் உள்நாட்டு மற்றும் இந்திய குடியுரிமை இல்லாத வாடிக்கையாளர்களுக்காக எஸ் பி ஐ வங்கி அம்ரித் விருஷ்டி என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் டெபாசிட் செய்தால் எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
5 லட்சம் டெபாசிட் செய்தால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 7,16,130 ரூபாய் கிடைக்கும்.
பத்து லட்சம் டெபாசிட் செய்தால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 14,32,261 ரூபாய் கிடைக்கும்.
15 லட்சம் டெபாசிட் செய்தால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 21,43,121 ரூபாய் கிடைக்கும்.
20 லட்சம் டெபாசிட் செய்தால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 28,57,495 ரூபாய் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் அருகில் உள்ள sbi வங்கி கிளையை அணுகவும்.