கர்நாடகாவில் கடந்த 2021ம் வருடம் நவம்பர் மாதம் 545 எஸ்.ஐ பணியிடங்களுக்கான தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதையடுத்து தேர்வு முடிவுகள் கடந்த 2022ம் வருடம் மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதன்பின் நடந்து முடிந்த எஸ்ஐ பணியிடங்களுக்கான தகுதி தேர்வு முடிவுகளில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடந்தது தெரியவந்தது.

அதாவது, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற 20 லட்சம் முதல் 50 லட்சம் வரைக்கும் லஞ்சம் கொடுத்ததாக அறிவிப்பு வெளியாகியது. அதனை தொடர்ந்து சிஐடி காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் ஆட்சேர்ப்பு பிரிவு முன்னாள் கூடுதல் டிஜிபி அம்ருத்துப்பால் உட்பட பலரை கைது செய்தனர்.

அதோடு இந்த விசாரணையின் முடிவில் லஞ்சம் கொடுத்துதான் உறவினர் வாயிலாக ஒருவர் எஸ்.ஐ தேர்வில் வெற்றி பெற்றதாக கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் இவ்வழக்கில் சிலர் மட்டுமே சிக்கியிருப்பதாகவும், பல பெயர்கள் விடுபட்டு உள்ளதாகவும் அறிவிப்பு வெளியான சூழலில், தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது.