
யானைகள் பெரும்பாலும் கம்பீரமானவை. மிரள வைக்கும் தோற்றத்தோடு இருக்கும். யானைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அரிய பாடம் ஒற்றுமை. எத்தகைய இடர் வரினும் தனது குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் வாழும் ஒரு விலங்கு. இத்தகைய யானை கூட்டமானது அசாமில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றின் ஆழமான நீரில் அழகாக கூட்டம் கூட்டமாக நீந்திக் கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மிகப்பெரிய நதியின் நடுவே மிகப்பெரிய யானை கூட்டம் நீந்தி செல்லும் காட்சி உண்மையிலேயே பார்ப்போரை பிரம்மிக்க வைக்கிறது. இயற்கைக்கும், வன விலங்குகளுக்கும் இடையிலான இந்த அழகான தொடர்பானது விலை மதிப்பற்ற சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
View this post on Instagram