அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது, “எல்லாருக்கும் எல்லாம்” என்ற உயரிய லட்சியத்தோடு தமிழ்நாட்டிற்கான பரவலான திட்டங்களை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் இன்று பங்கேற்றோம்.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கழக எம்.எல்.ஏ.க்கள் ஆற்ற வேண்டிய பணிகள், தொகுதி மக்களின் ஏற்றத்துக்கும் – தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குமான பங்களிப்பை ஒட்டி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இக்கூட்டத்தில் வாயிலாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள் என பதிவிட்டுள்ளார்.
‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற உயரிய லட்சியத்தோடு தமிழ்நாட்டிற்கான பரவலான திட்டங்களை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் இன்று… pic.twitter.com/19QqV4gstk
— Udhay (@Udhaystalin) March 14, 2025
