பெரம்பலூர் மாவட்டம் குற்றம் வட்டாரம் கத்தாழை மேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் கருப்பையா – செல்வி தம்பதியினர். இருவரும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தனர். இவர்களுக்கு சொந்தமாக 68 ஆடுகள் உள்ளது. அதில் 58 செம்மறி ஆடு, 10 வெள்ளாடு உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல இருவரும் ஆடுகளை மேய்த்து விட்டு பின்பு வேலியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து ஆடுகளை அடைத்த இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு ஆடுகள் காணாமல் போயிருந்தது.

அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தம்பதியினர் இருவரும் அருகே உள்ள பல இடங்களுக்கு சென்று தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கும் ஆடுகள் கிடைக்கவில்லை. காலையில் ஆடுகள் வீட்டிற்கு திரும்பி வந்து விடும் என்று கருப்பையாவும் செல்வியும் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

ஆனால் ஆடுகள் திரும்பி வரவே இல்லாததால் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆடுகளின் மொத்த மதிப்பு சுமார் 7 லட்சம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.