
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணியும் மொத்தமாக தட்டி தூக்கி விட்டது. அவர்களை எதிர்த்து களம் கண்ட அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கடந்த தேர்தலில் இணைந்து போட்டியிட்ட அதிமுக மற்றும் பாஜக இந்த தேர்தல் தொடங்குவதற்கு முன்பு தனித்தனி பாதையை ஏற்படுத்திக் கொண்டன. தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது அதிமுக மற்றும் பாஜக இணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால் அதிக அளவில் வெற்றி கிடைத்திருக்கும் என பேச்சு எழுந்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததால் பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லி செல்லும் அண்ணாமலை அமித்ஷா மற்றும் ஜேபி.நட்டா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாகவும் தேர்தலில் சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி தலைமையிடம் பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.