பொதுவாகவே மக்கள் அனைவரும் இளமை காலத்தில் சம்பாதித்து விட்டு முதுமை காலத்தில் தாங்கள் சேமித்த பணத்தை வைத்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற தான் நினைப்பார்கள். இந்தியாவின் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி 40 முதல் 50 வயதை தாண்டிய பிறகு ஓய்வூதியம் வழங்கக்கூடிய சிறப்பு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஒருமுறை மட்டுமே பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும்.

பின்னர் உங்களின் ஓய்வு காலம் முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு புதிய ஜீவன் சாந்தி யோஜனா திட்ட எண் 858 என்று பெயர். இந்த திட்டத்தை தொடங்கும் போது உங்களுக்கு ஓய்வூதியம் தேவை என்று தேர்வு செய்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வருட கால இடைவேளைக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் பெறலாம். இது ஒரு பிரீமியம் திட்டம் ஆகும். பொத்திவைக்கப்பட்ட வருடாந்திர திட்டம் ஓய்வூதிய தொகையை ஆண்டுதோறும் அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதந்தோறும் பெற முடியும். இந்த திட்டத்தில் 1.81 முதல் 14.62 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது