
இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வியக்கவைக்கும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ரஷ் என்பவர் புதிதாக கின்னஸ் சாதனை ஒன்றை படைத்தார். அந்த வகையில் அவர் ஒரு லிட்டர் எலுமிச்சை ஜூசை 13.4 வினாடியில் குடித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.
இவர் இதுவரைக்கும் 200 க்கும் மேற்பட்ட கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளார். எலுமிச்சை ஜூஸ் குடிப்பதற்கு முன்பாக டேவிட் முதலில் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே மூக்கின் வழியாக ஒரு நிமிடத்தில் 10 பலுன்களை காற்று நிரப்பி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.