நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் லித்தியம் பேட்டரி உபகரணங்களுக்கு இறக்குமதி வரிவிலக்கு தொடரும் என்றும் எலக்ட்ரானிக் வாகனங்களுக்கு வரி விலக்கு தொடரும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எலக்ட்ரானிக் வாகன பேட்டரிக்கு பயன்படுத்தும் லித்தியம்- அயன் மூலப்பொருட்களுக்கு வரி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.