Toyota Innova (MPV) காரின் பெட்ரோல் பயன்பாடு இல்லாத, எத்தனால் மூலம் இயங்கும் மாடலை இன்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகம் செய்து வைத்தார். அந்த விழாவில் பேசிய அவர், நமது நாட்டில் பெட்ரோல் இறக்குமதி இல்லாத நாள் விரைவில் வரும். நமது விவசாயிகள் உற்பத்தி செய்யும் எத்தனால் மூலம் வாகனங்கள் ஓடும். மேலும், கார்கள், பைக், ஆட்டோ அனைத்தும் 100% எத்தனாலில் இயங்க வேண்டும் என்பதே எனது கனவு என்றார்.

உலக நாடுகளில் இதுவரையில் இல்லாத, 100% எத்தனால் மட்டுமே கொண்டு இயங்கும் காரை இந்திய அறிமுகம் செய்து சாதனை படைத்துள்ளது. Toyota நிறுவனம் அறிமுகம் செய்துள்ள Innova கார் தான், உலகின் முதல் BS 6 கட்டம் 2 விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிஃபைடு ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் (BS-VI (Stage-II), electrified flex-fuel) காராகும். இது உலக சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.